களு கங்கையை சுற்றி உள்ள பகுதிகளில் அதிகளவான மழைவீழ்ச்சி காரணமாக களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
குறித்த பகுதியில் 100 மில்லி மீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவான காரணத்தினால் இவ்வாறு நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
மேலும் இரத்தினபுரி, குருவிட்ட, எலபாத்த, கிரிஎல்ல அயகம ஆகிய பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் 3 மணித்தியாலங்களுக்கு சிறிய அளவில் வௌ்ளப்பெருக்கு ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.