ஒருபோதும் ரிஷாட் பதியுதீன் தீவிரவாதியாக செயற்பட்டதில்லை – மங்கள சமரவீர

Date:

ரிஷாட் பதியுதீன் சிறந்த முஸ்லிமாக இருந்தவர், ஒருபோதும் தீவிரவாதி போன்று செயற்பட்டதில்லை  என்பதை நான் நன்கறிவேன், என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ரிஷாட் பதியுதீன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு மாதமாகியுள்ள நிலையில் இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது ட்வீட்டர் பதிவொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ரிஷாட் பதியுதீன் எம்.பி கைது செய்யப்பட்டு இன்றுடன் 30 நாட்கள் கடந்துவிட்டன.

ரிஷாட் பதியுதீன் 1990 களில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் உறுப்பினராக இருந்த காலத்திலிருந்தே, எனக்கு அறிமுகமானவர். இலங்கையின் மிகவும் மோசமான ஆட்சியின், பிழையான நிர்வாக செயல்முறை மற்றும் தடுமாற்றங்களிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கு, ரிஷாட் பதியுதீன் ஒரு பலிக்கடாவாக பயன்படுத்தப்படுகின்றார்”

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...