நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு அம்பியூலன்ஸ் வண்டிகளை கட்டணம் இன்றி அதிவேக நெடுஞ்சாலைகளிலும் பயணிக்க முடியும் என நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் பரவலைக் கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் 1,051 பேர் இதுவரை கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.