சந்தைகளில் சமையல் எரிவாயுவுக்கும் ,12.5 கிலோகிராம் நிறை கொண்ட எரிவாயு கொள்கலன்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாட்டில் பல பாகங்களிலும் சுமார் 200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு , நுகர்வோர் சேவை அதிகார சபையின் கட்டளையை மீறி லிற்றோ நிறுவனத்தினால் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனிற்கு பதிலாக 18 லீற்றர் அடங்கிய சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைகளுக்கு தற்போது விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, அந்த சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைகளில் இருந்து உடனடியாக அகற்றுமாறு நுகர்வோர் சேவை அதிகார சபை லிற்றோ நிறுவனத்திற்கு அறிவித்திருந்தது.எனினும்12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனிற்கு பதிலாக 18 லீற்றர் நிறை கொண்ட எரிவாயு கொள்கலன்களே சந்தைகளில் இருப்பதாக நுகர்வோர் உட்பட விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.