தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ள ‘இடுகம’ நிதி!

Date:

சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் தற்போதுள்ள ரூ.1,360,922,969.24 இருப்பு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது..

நிதியத்திற்கு வரவு வைக்கப்பட்ட மொத்த தொகை ரூ. 1,752,402,793.24 ஆகும். இதுவரை செலவிடப்பட்ட தொகை ரூ .391,479,824.00. இது சேகரிக்கப்பட்ட மொத்த தொகையில் 23% ஆகும்.

 

நிதியத்திற்கு வரவு வைக்கப்பட்ட மொத்த தொகை – ரூ. 1,752,402,793.24

நிதியின் தற்போதைய இருப்பு – ரூ. 1,360,922,969.24

 

 

தடுப்பூசிகளுக்கு அரசாங்கம் செலவிட எதிர்பார்க்கும் தொகையுடன் ஒப்பிடும் போது மீதமுள்ள இருப்பு மிகவும் சிறிய தொகையாகும். எனினும் நிதியத்தின் இருப்பை தடுப்பூசிக்குப் பயன் படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்த நிதியத்தின் முகாமைத்துவ சபை சுட்டிக் காட்டியுள்ளது.

 

நிதியத்தின் பணம் செலவிடப்பட்ட விதம் பின்வருமாறு.

 

தொற்றுநோய் நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள்

 

பி.சி.ஆர் சோதனை தொடர்பான செலவுகள் – 42,605,812.00

 

விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு – 67,543,967.00

 

தனிமைப்படுத்தலுடன் தொடர்புடைய செலவுகள் – 38,031,065.00

 

நிர்வாக செலவுகள் – 3,000.00

 

மொத்தம் – 391,479,824.00

 

செலுத்த வேண்டியவை

தடுப்பூசி ஏற்றல் தொடர்பான செலவுகள் – 41,545,980.00

10 ஆம்புலன்ஸ் வண்டிகள் கொள்வனவிதற்கு – 194,000,000.00

ஐ.சி.யூ படுக்கைகள் கொள்வனவு – 7,750,000.00

செலுத்தப்பட்ட மற்றும் செலுத்தப்பட வேண்டிய மொத்த செலவு- 391,479,824.00

இந்த செலவுகள் அனைத்தும் சுகாதார அமைச்சு மற்றும் இராணுவ தலைமையகம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொது மக்கள், பல உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் சிலர் இட்டுகம கொவிட் நிதியத்திற்கு பணத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். கொவிட் -19 நிதிக்கு சர்வதேச நிதி நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் பங்களிக்கவில்லை

 

சர்வதேச சட்டத்தின் படி, வெளிநாட்டு உதவி மற்றும் நன்கொடைகள் திறைசேரிக்கே வழங்கப் படுகின்றன. இந்த நிதியத்திற்கும் சர்வதேச அமைப்புகளின் நன்கொடைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கொவிட் 19 நிதியத்திற்கு 2020 ஆம் ஆண்டில் அதிகமான பொதுமக்களால் நன்கொடைகள் கிடைக்கப் பெற்ற போதும், 2021 ஏப்ரல் மாதம் வரை கிடைக்கப் பெற்ற சராசரி மாத நன்கொடை சுமார் ரூ .7 மில்லியன் ஆகும்.

 

இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் பரவிய தகவல்கள் உண்மையல்ல என்றும் 2020 ஆம் ஆண்டிற்கான நிதியத்தின் கணக்குகள் கணக்காய்வுக்காக தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் நிதியத்தின் முகாமைத்துவ சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடி: 7 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குள் (SLBFE) இடம்பெற்று வந்த போலி இஸ்ரேல்...

இலங்கை – ஓமான் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

ஓமான் சுல்தானகத்தின் வர்த்தக அமைச்சின் வெளிநாட்டு வர்த்தக மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு...

‘ஆபத்துக்களை எதிர்கொள்ளாமல் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது’: ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று...

1,546 மில்லியன் ரூபா செலவில் ஒருகொடவத்தை – அம்பதலே பாலங்கள் நிர்மாணம்!

கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் பிரதான வீதிகளில் ஒன்றான ஒருகொடவத்தை – அம்பதலே...