வெள்ள ஆபத்து குறைந்தது!

Date:

நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்தமை தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஊடாக பல ஆறுகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வெள்ள அனர்த்தம் பற்றிய எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் நேற்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு அமைய களனி கங்கை, களுகங்கை ஜிங் கங்கை மகாவலி கங்கை ஆகிய ஆறுகளினதும், மகா ஓயா, அத்தனகல்ல ஓயா ஆகியவற்றினதும் நீர்மட்டம் சாதாரண மட்டத்தில் காணப்படுகின்றது.

 

இதேவேளை நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் 6 மாகாணங்களில் 9 ஆயிரத்து 96 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

ஒருவர் காணாமல் போயுள்ளார். 215 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 13 தற்காப்பு நிலையங்களில் 76 குடும்பங்கள் தங்கியுள்ளனர். எனினும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தினால் 6 மாவட்டங்களுக்கு வெளியிடப்பட்டிருந்த மண்சரிவு தொடர்பான எச்சரிக்கை இன்று மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...

மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள்

மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீணான அச்சத்தை போக்கும் வகையில், எரிபொருள் விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய...