இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசிகளின் விபரம்!

Date:

நாட்டில் இதுவரை 1,943,708 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, நேற்றைய தினத்தில் (05) மாத்திரம் 22,907 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 953,480 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் 1,697 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை 353,156 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 64,986 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...