இன்று இதுவரையில் 2,716 பேருக்கு கொரோனா!

Date:

இலங்கையில் மேலும் 543 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில் இன்று இதுவரையில் 2,716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 213,377 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 2,168 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 180,427 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,843 ஆக அதிகரித்துள்ளது.

Popular

More like this
Related

‘சமநீதி’ மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா நாளை கொழும்பில்

'சமநீதி' (Equity) என்ற பெயரிலான புதிய மாதாந்த சஞ்சிகையொன்று இம்மாதம் முதல்...

‘சிசு செரிய’ சேவையை மேலும் விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானம்!

பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...

மலேசியாவின் பகாங் மாநிலத்தில் புனித குர்ஆன் பல்கலைக்கழகம் உருவாக்கம்: சுல்தான் அப்துல்லா வரலாற்று அறிவிப்பு!

மலேசியாவின் பகாங் (Pahang) மாநிலத்தில் குர்ஆனியக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், 'புனித...

சாரதி அனுமதிப் பத்திர விண்ணப்பதாரர்களில் 8% பேருக்கு உடல்நலக் குறைபாடு.

இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரம் (Driving License) கோரி விண்ணப்பித்தவர்களில் சுமார்...