கம்பஹா மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொரோனா!

Date:

இலங்கையில் நேற்றைய தினம் பதிவான 3,306 கொரோனா நோயாளர்களில் பெரும்பாலானோர் கம்பஹா மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 1,004 ஆகும்.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்திலிருந்து 501 பேர் மற்றும் பதுளை மாவட்டத்திலிருந்து 251 பேரும் பதிவாகியுள்ளனர். ஏனைய 1,550 பேரும் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று (03) முப்படையினரால் மற்றும் சுற்றுலா விடுதிகளினால் பராமரிக்கப்பட்டு வருகின்ற 52 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களினுள் 3,950 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை இன்று காலை (கடந்து 24 மணித்தியாலங்களுக்குள்) 17 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிலிருந்து 551 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதேவேளை முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் பிரிவுகள் மற்றும் கிராம அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள பயண கட்டுப்பாடு மேலும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....