பலவந்தமாக பௌத்த கொடி, வெசாக் கூடுகளால் அலங்கரிக்கப்பட்ட ஜெய்லானி பள்ளிவாசல்

Date:

சுமார் 1200 வரு­டங்கள் பழைமை வாய்ந்த பலாங்­கொடை – தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல், பள்­ளி­வாசல் நுழை­வாயில், வளாகம், ஸியாரம் என்­பன கடந்த வெசக் பண்­டி­கையின் போது பௌத்த கொடி­க­ளாலும் வெசக் கூடு­க­ளாலும் பல­வந்­த­மாக அலங்­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அலங்­கா­ரங்­களும், வெசக் கூடு­களும் தொடர்ந்தும் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

பள்­ளி­வாசலில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த பச்சை நிற கொடிகள் கழற்றி அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. பள்­ளி­வா­சலில் பணி­யா­ளர்கள் இல்­லாத சந்­தர்ப்­பத்­தி­லேயே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. நெல்­லி­கல வட்­ட­கும்­புற தம்மா ரதன தேரரின் வழி­காட்­டல்­களின் படியே பள்­ளி­வா­சலில் வெசக் அலங்­கா­ரங்கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் தற்­போ­தைய பள்­ளி­வாசல் நிர்­வாகம் ஏதும் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை எனவும், பள்­ளி­வாசல் தலைவர் உட்­பட நிர்­வா­கிகள் பலர் கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­டுள்­ளதால் பள்­ளி­வாசல் நிர்­வாகம் ஸ்தம்­பித நிலையை அடைந்­துள்­ள­தா­கவும் அப்­ப­குதி மக்கள் ஊடகத்துக்கு தெரி­வித்­தனர்.

இது தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் தற்­போ­தைய தலைவர் எம்.எஸ்.எம்.நபீ­ஸிடம் ‘விடி­வெள்ளி’ வின­விய போது, ‘தனக்கு எதுவும் தெரி­யாது’ எனத் தெரி­வித்தார்.

பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபை முன்னாள் தலைவி ரொசானா அபு­சா­லியை விடி­வெள்ளி தொடர்பு கொண்டு வின­விய போது பள்­ளி­வாசல் அலங்­கா­ரங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பதை உறுதி செய்­த­துடன் இது தொடர்பில் தற்­போ­தைய நிர்­வா­கமே இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்றார்.

தற்போதைய நிர்வாக சபை வக்பு சபையினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அதன் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவு பெறுகிறது.

(ஏ.ஆர்.ஏ.பரீல்)<

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...