பல்கலைக்கழக மாணவி ஒருவர் வீட்டுத் தொகுதியில் பற்றிய தீயில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் மொரட்டுவ பகுதியில் அமைந்துள்ள சொய்சாபுர வீட்டுத்தொகுதியின் மூன்றாவது மாடியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தை அடுத்து மொரட்டுவ மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
உயிரிழந்த மாணவி தனக்குத் தானே தீயை பற்றவைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.