பிரதமரினால் வைத்திய உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Date:

அமெரிக்காவின் கலிபோர்னியா வைத்திய சேவை ஆதரவு அறக்கட்டளையினால் கொழும்பு பொது வைத்தியசாலையின் வைத்திய சேவை மன்றத்திற்கு கிடைத்த வைத்திய உபகரணங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (06) ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஆறு வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டது.

ருஹுணு கெரலிய அமைப்பின் வேண்டுகோளுக்கமைய கிடைத்த இந்த வைத்திய உபகரணங்கள் தங்காலை புராண குடா வனவாச விகாரையில் வைத்து தங்காலை மற்றும் வளஸ்முல்ல ஆதார வைத்தியசாலை மற்றும் அம்பலந்தொட, வீரகெடிய, கடுவன மற்றும் சூரியவெவ மாவட்ட வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

நாடு முழுவதும் 150 வைத்தியசாலைகளுக்கு இந்த அறக்கட்டளையினால் இதற்கு முன்னரும் அத்தியவசிய வைத்திய உபகரணங்கள் மற்றும் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

கொழும்பு பொது வைத்தியசாலையின் வைத்திய சேவை மன்றத்தின் பணிப்பாளர் வணக்கத்திற்குரிய ரஜவெல்லே சுபூதி தேரர், மஹரகம சிறி வஜிரஞான தர்மாயதனாதிபதி வட அமெரிக்காவின் பிரதான சங்கநாயக்கர் மஹரகம தம்மசிறி தேரர், தங்காலை புராண குடா வனவாச விகாரையின் விகாராதிகாரி மண்டாடுவே தீரானந்த தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் இதில் பங்கேற்றனர்.

மேலும் அமைச்சர் பந்துல குணவர்தன, தென் மாகாண சபையின் தலைவர் சோமவங்ஷ கோதாகொட, ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் எச்.பீ.சுமனசேகர, மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் தீபிகா படபெந்திகே, தங்காலை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி விசேட வைத்திய நிபுணர் தில்கா சரணசிங்க, ருஹுணு கெரலிய அமைப்பின் தலைவர், பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் நிசாந்த ஜயசிங்க, சிரேஷ்ட துணை தலைவர் சட்டத்தரணி விதுர வீரகோன் உள்ளிட்ட பலரும் குறித்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...