இந்திய மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பெண்கள் உள்பட 17 பேர் பரிதாபமாக இறந்தனர்.
உரவாடே கிராமத்தில் செயல்பட்டு வந்த எஸ்.வி.எஸ் அக்வா டெக்னாலஜிஸ் என்ற அந்த நிறுவனத்தில் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையில் ஈடுபட்டிருந்த போது, எந்திரத்தில் ஏற்பட்ட வெடிப்பால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும், 3 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.பெருமளவு தீ பரவியதன் காரணமாக நிறுவனத்தின் சுவரை உடைத்து தான் உள்ளே சென்று 20 பேரை அவர்கள் மீட்டனர். எனினும் தீயில் கருகி 17 ஊழியர்கள் பரிதாபமாக பலியாயினர்.