புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரிடம் இருந்து மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் மூன்று விமானப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்களால் ஒரு இலட்சம் ரூபாய் பணம் இவ்வாறு மிரட்டி பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.