உலகசமுத்திரதினத்தை இன்று கொண்டாடுகிறோம். நமது பூகோலத்தில் ஒக்ஸிஜனில் 50% கடல் உற்பத்தி செய்வதோடு அவை, மனிதகுலத்தின் 70% வாழ்வாதாரத்தை பாதுகாக்கிறது. MVXPressPearl பேரழிவு, அரசாங்கத்தின் இயலாமை மற்றும் தவறான அரசாங்கத்தின் நேரடி நடவடிக்கைகளின் விளைவாக நாட்டின் கடல் வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூரமான குற்றத்தைச் செய்தவர்கள் அனைவரையும் வெளிப்படையான முறையில் நீதிக்கு முன் கொண்டுவருவது அரசாங்கத்தின் நெறிமுறை சார்ந்த, தார்மீக ரீதியான மற்றும் சட்டபூர்வமான கடமையாகும். கற்பனைக்கு எட்டாத இந்த பேரழிவை கையாள்வதில் அரசாங்கம் தீவிரமாக உள்ளதா என்பதை அனைத்து இலங்கையர்களும் கவனித்து வருகின்றனர்.