2022ஆம் ஆண்டு முதல், முதலாம் தரத்திற்காக 45 மாணவர்களை இணைத்து கொள்ள அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஏற்கனவே உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறி கல்வியமைச்சு செயற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.