இந்துசமுத்திரத்தின் ஆழ்கடல் பகுதியில் நில அதிர்வு

Date:

இலங்கைக்கு கிழக்காக 300 கிலோமீற்றர் தொலைவில், ஆழ்கடல் பகுதியில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவீட்டு கருவியில் 4.8 மெக்னிடியூட்டாக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

சுமார் 50 கிலோமீற்றர் ஆழ்கடல் பகுதியில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக நில அதிர்வு மற்றும் இயற்கை அனர்த்தம் தொடர்பில் தெளிவுபடுத்தும், ஊடகம் ஒன்று தமது இணையத்தில்  தெரிவித்துள்ளது.

மேலும் ,மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை, ஏறாவூர் ஆகிய பகுதிகள் இந்த நில அதிர்வை உணரக்கூடிய பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளில் இந்த அதிர்வு உணரப்பட்டதாக எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...