இன்று (08) இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் ரிஷாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்துக்கு அழைப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வருவது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சிறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு கடிதம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.