சமூகவலைத்தளங்கள் ஊடாக அரசாங்கத்துக்கு எதிராக அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில்,
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்ட இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவரான ரஜீவ் மெத்தீவை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் இன்று உத்தரவிட்டார்.
ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட மேலும் பல அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தினால் கடந்த 4 ஆம்திகதி காலை ஊடக அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டது.
பின்னர் இந்த செய்தி பொய்யானது என அவருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதற்கமைய, ரஜீவ் மெத்தீவ், மறுதினம் தனது சட்டத்தரணியுடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று வாக்குமூலம் வழங்கியதையடுத்து கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.