உலர்ந்த மஞ்சள் மற்றும் பெரிய வெங்காயம் கடத்தல் சந்தேக நபர்கள் கைது!

Date:

சட்டவிரோதமான முறையில் உலர்ந்த மஞ்சள் மற்றும் பெரிய வெங்காய விதைகள் தொகை ஒன்றை இந்நாட்டுக்கு கொண்டு வந்த 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சிலாபம், வட்டக்கல்லிய பகுதியில் கடற்படையினர் மேற்கொண்டுள்ள சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இந்த நாட்டுக்கு கொண்டு வர முயன்ற 362 கிலோ 950 கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 571 கிலோ 400 கிராம் பெரிய வெங்காய விதைகள் நேற்றைய தினம் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

 

இதன்போது 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

 

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அதன் நேற்று மேற்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினர் இலங்கை கடலோர காவல்படை மற்றும் சிலாபம் பொலிஸாருடன் இணைந்து சிலாபம், வட்டக்கல்லிய பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, களப்பு வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான 02 டிங்கி படகுகளில் இருந்து இறக்கப்பட்ட 362 கிலோ 950 கிராம் உலர்ந்த மஞ்சள் கொண்ட 14 சாக்குகளும் 571 கிலோ 400 கிராம் பெரிய வெங்காயம் விதைகள் நிரப்பப்பட்ட 22 சாக்குகளும் கைது செய்யப்பட்டதுடன் குறித்த நடவடிக்கைகாக பயன்படுத்தப்பட்ட 02 டிங்கி படகுகள் மற்றும் 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

மேலும், சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட இந்த உலர்ந்த மஞ்சள் மற்றும் பெரிய வெங்காயம் விதைகள் கொண்டு செல்ல வந்ததாக நம்பப்படுகின்ற ஒரு சிறிய லொறி வண்டி மற்றும் இரண்டு நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

 

கொவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 முதல் 50 வயதுக்குட்பட்ட சிலாபம் மற்றும் பன்னல பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள், பெரிய வெங்காயம் விதைகள், 02 டிங்கி படகுகள், லாரி வண்டி மற்றும் 06 சந்தேக நபர்களும் சிலாபம் பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...