களனி கங்கையை அண்டிய பகுதிகள் சிலவற்றில் தற்போது ஏற்பட்டுள்ள சிறியளவிலான வெள்ள அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் சீதாவக்க, கடுவலை, பியகம, கொலன்னாவை, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் எதிர்வரும் 6 முதல் 18 மணித்தியாலங்களுள் தற்போதைய வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கக் கூடும் என அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, களனி கங்கையின் இரு மருங்குகளிலும் வசிப்பவர்கள் வெள்ள அபாயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.
இதேவேளை, களுகங்கை, கின் கங்கை, நில்வளா கங்கை, மகாவலி கங்கை, மஹஓயா மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.