இலங்கை கைத்தொழில் அமைச்சின் செயலாளர் அனூஷ பெல்பிட்ட தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு அனுமதி கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதனடிப்படையில் அவருடைய பதவிக்கு இலங்கை துறைமுக அதிகார சபைத் தலைவராக கடமையாற்றிய ஓய்வு பெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் பதவிக்கு அத்துறையில் தேர்ச்சி பெற்ற நிஹால் கெப்பெட்டிப்பொல நியமிக்கப்பட்டுள்ளார்.