கொரோனாவினால் மரணித்த 605 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன!

Date:

கொரோனா தொற்றினால் உயிரிழந்த, 605 பேரின் சரீரங்கள், இதுவரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்தியர் அசேல குணவர்தன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் குறித்த சரீரங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

572 முஸ்லிம்களின் சரீரங்களும், 14 கிறிஸ்தவர்களின் சரீரங்களும், 12 இந்துக்களின் சரீரங்களும், 7 பௌத்தர்களின் சரீரங்களும் இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...