தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 433 பேர் கைது!

Date:

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 433 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் அதிகளவானோர் எம்பிலிபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.எம்பிலிபிட்டியில் 96 பேரும், மாத்தளையில் 73 பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை போன்ற தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பற்றாத குற்றச்சாட்டில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன், இதுவரை தனிமைப்படுத்தல் விதிகன மீறிய குற்றச்சாட்டில் 42,347 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...