பேருவளை மருதானை செரிடி அமைப்பினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு!

Date:

பேருவளை பிரதேசத்தில் சமூக, கல்வி, மற்றும் பொருளாதார நலன்புரி செயல்திட்டங்களை மேற்கொண்டு வரும் பேருவளை Maradana Charity அமைப்பு இன்று  கொவிட்  தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள வறிய மற்றும் தேவையான 2, 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

Maradana Charity அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் தஸ்தகீர் பாச்சா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லலித் பத்மகுமார அவர்கள் விஷேட அதிதியாக கலந்துகொண்டு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் Maradana Charity அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பிரதேச நலன்விரும்பிகள், தனவந்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம், சிங்கள, மற்றும் கிறிஸ்தவ குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் தற்பொழுது நிலவுகின்ற நெருக்கடியான நிலைமையில் வறிய மக்களுக்கு இது மிகுந்த பயனளிக்கும் என்பதுடன், இந்நலன்புரிச் சேவை பிரதேசத்தின் சக வாழ்வினை மேலும் கட்டியெழுப்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...