இலங்கையில் 200 பேர் போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டின் கீழ் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி போலிஸ் மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார். மேலும் குருநகல் மாவட்ட குளியாப்பிட்டிய பகுதியில் 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1997 என்ற இலக்கத்தினூடாக இலங்கை முழுவதும் போதைப்பொருள் பாவனை, விற்பனை தொடர்பில் தகவல் வழங்க முடியும் எனவும் போலீசார்பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.