மீனவர்களுக்கு கடற்றொழில் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

Date:

தீப்பற்றி எரிந்த எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக இந்திய கப்பல் ஒன்று ஆய்வுகளை மேற்கொள்வதன் காரணமாக, பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு  கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 25ம் திகதி  எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட கடற்சூழல் பாதிப்பு குறித்து ஆராய்வதற்காக குறித்த இந்திய கப்பல் இலங்கை வந்தது.26ம் திகதியில் இருந்து இந்த கப்பல் தமது பணிகளை ஆரம்பித்துள்ளது. மேலும் எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் இந்த ஆய்வுகள் இடம்பெறும்.

இதன் காரணமாக இந்த நாட்களில் குறித்த கடற் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...