2021ஆம் ஆண்டுக்கான பேரித்தம் பழ விநியோகம் குறித்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் வெளியிட்ட தகவல்

Date:

சவுதி அரசாங்கத்தினால் இலங்கை முஸ்லிம்களுக்கு புனித ரமலான் மாதத்திற்கு பேரீத்தம்பழம் வழங்குவதுவழமையாக இருந்து வருகின்றதுமேற்படி கிடைக்கப் பெறுகின்ற பேரித்தம் பழங்களை இலங்கை வாழ்முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பது எமது திணைக்களத்தின் ஒரு பணியாகும்எனவே இவற்றிற்காக அரசாங்கம்வருடா வருடம் நிதி ஒதுக்கி வருகின்றதுஅந்தவகையில் இவ்வருடம் 22 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுஅத்துடன் வழமைக்கு மாறாக இம்முறை சவுதி அரசாங்கம் 75 மெட்ரிக் தொன் பேரித்தம் பழங்களையேவழங்கியுள்ளதுஇது இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கு  போதுமானதாகஇருக்கவில்லை.எனவே மேற்படி கிடைக்கப்பெற்ற பேரித்தம் பழங்களை விநியோகிப்பதற்காக ஆலோசனைக்கூட்டம் ஒன்றை திணைக்களம் ஏற்பாடு செய்தது.

அக்கூட்டத்தில் கலந்து கொண்டோர்

திணைக்களம் சார்பாக

1. பீ எம் அஷ்ரப் (பணிப்பாளர்)

2.எம் எல் எம் அன்வர் அலி (உதவிப் பணிப்பாளர்)

3.  எம் அஸ்ரின் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்)

4.ஜே கே ரஷீத் (அபிவிருத்தி உத்தியோகத்தர் )

பிரதமர் அலுவலகம் சார்பாக

1.பர்சான் மன்சூர்(முஸ்லிம் சமய விவகாரங்களுக்கு

பொறுப்பான பிரதம மந்திரியின் இணைப்புச் செயலாளர்)

2.ஹஸன் மௌலானா (முஸ்லிம் சமய விவகாரங்களுக்கு பொறுப்பான புத்தசாசன மற்றும் மத விவகாரஅமைச்சின் இணைப்புச் செயலாளர் )

மேற்படி கலந்துரையாடலில் தீர்வாக

1.திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிவாசல்களுக்கு ஒவ்வொருபெட்டி (20 கிலோ கிராம் கொண்டபேரீத்தம் பழங்கள் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

2.மிகுதி பேரித்தம் பழங்களை வறுமையான மாவட்டங்களை அடையாளம் கண்டு இருக்கும் தொகைக்கேற்பஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஒவ்வொரு கிலோ கிராம் வீதம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

3.சவுதி தூதுவராலயம் கேட்டுக்கொண்டதற்கிணங்க 4000 கிலோ கிராம் பேரிச்சம்பழம் தூதராலயத்துக்குவழங்கப்பட்டது.

வறுமையான மாவட்டங்கள் (புள்ளிவிபர திணைக்களத்தில் இருந்து பெறப்பட்டது)

1.மொனராகலை

2.மாத்தறை

3.ஹம்பாந்தோட்டை

4.முல்லைத்தீவு

5.கிளிநொச்சி

6.புத்தளம்

7.அனுராதபுரம்

8.வவுனியா

9.யாழ்ப்பாணம்

10.பதுளை

மேற்படி தீர்மானத்தின்படி பேரித்தம் பழ விநியோகம் மேற்கொண்டு வரும்போது

கௌரவ வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களுக்கு 26400 கிலோகிராம் பேரீத்தம்பழம்சவுதியில் இருந்து கிடைக்கப் பெறுவதாக தெரிவித்தனர்இவற்றை திணைக்கத்திற்கு அன்பளிப்புசெய்வதாகவும் அவற்றினை வன்னி தேர்தல் மாவட்டங்களான மன்னார் வவுனியா முல்லைத்தீவு ஆகியமாவட்டங்களில் உள்ள முஸ்லீம் மக்களுக்கு பாகிர்ந்தளிக்குமாறும் வேண்டிக் கொண்டார் . மேற்படி பேரித்தம்பழங்களை திணைக்களத்தின் நிதியில் தீர்வை செய்து திணைக்களத்தின் அதிகாரிகள் மூலம் வன்னி தேர்தல்மாவட்டத்தில் உள்ள முல்லைத்தீவுவவுனியாமன்னார் மாவட்டங்களுக்கு வினியோகிப்பது எனதீர்மானிக்கப்பட்டது.இதற்கான திறைசேரி அனுமதியும் கிடைக்கப் பெற்றது.

அத்துடன் மினுவாங்கொடை மற்றும் அட்டுளுகம பள்ளிவாசல்களுக்கு அவர்களது கிராமங்களுக்கு ஒவ்வொருகிலோ கிராம் பேரீத்தம்பழம் வழங்கக் கூடிய அளவு பேரீத்தம்பழம் கிடைக்க பெறுவதாகதெரிவித்தனர்.அவர்களும் திணைக்களத்தின் நிதியில் தீர்வை செய்து தருமாறு வேண்டிக் கொண்டனர்மேற்படிகிடைக்கப்பெற்றசுமார் 6000 கிலோகிராம் பேரீத்தம் பழங்கள் திணைக்களத்தின் சுமார் ரூபா 6 லட்சம்செலவில்  செலவு செய்து திணைக்கள அதிகாரிகள் மூலம்

பகிர்ந்தளிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் சவுதி அரசாங்கத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற 75மெட்ரிக் டொன்  பேரீத்தம் பழங்கள்முதல்கட்டமாக வறுமையாக அடையாளம் காணப்பட்ட

1.மொனராகலை 3600 K.g.

2.மாத்தறை  8020 K.g.

3.ஹம்பாந்தோட்டை 5500 K.g.

4.கிளிநொச்சி 340 K.g.

மாவட்டங்களுக்கு ஒரு முஸ்லிம் குடும்பத்திற்கு ஒரு கிலோ கிராம் வீதம்  வழங்கப்பட்டது.

அத்துடன் அடுத்து அடையாளம் காணப்பட்டு புத்தளம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்கள் வறுமையானஅடையாளம் காணப்பட்ட மாவட்டங்களாக இருந்த போதும் அவற்றின் முஸ்லிம் குடும்பங்கள் அதிகமாககாணப்படுவதால் அவற்றுக்கு வழங்குவதற்கு போதுமான தொகை பேரீத்தம் பழங்கள் இல்லாததன் காரணமாகஅடுத்த மாவட்டமான யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கும் மிகுதி  தொகை பதுளை  மாவட்டத்திற்கும் வழங்கப்படவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிரகாரம்,

1. யாழ்ப்பாணம் 1360 K.g.

2.பதுளை 6200 K.g.(பதுளை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் குடும்பங்களுக்கு சுமார் 400 கிராம் வீதம்பேரீத்தம்பழம் வழங்கப்பட்டுள்ளது)  வழங்கப்பட்டது .

அத்துடன் எஞ்சிய மாவட்டங்களான கீழ்வரும்

மாவட்டங்களுக்கு பதியப்பட்ட பள்ளிவாசல்களுக்கு ஒவ்வொரு பெட்டிகள்(20 K.g.கொண்ட)  வீதம்வழங்கப்பட்டது.

1.கொழும்பு (164*20k.g.)

2.கம்பஹா(97*20K.g)

3.களுத்தறை  (102*20K.g)

4.கண்டி (287*20K.g)

5.மாத்தளை (63*20K.g)

6.நுவரெலியா (40*20K.g)

7.காலி(57*20K.g)

8.மட்டக்களப்பு (157*20K.g)

9.அம்பாறை (267*20K.g)

10.திருகோணமலை (208*20K.g)

11.குருநாகல் (206*20K.g)

12.புத்தளம் (200*20K.g)

13.அனுராதபுரம் (112*20K.g)

14.பொலன்னறுவை (41*20K.g)

15.இரத்தினபுரி (65*20K.g)

16.கேகாலை (111*20K.g)

கிடைக்கப்பெற்ற பேரீத்தம் பழங்களில் 72560 K.g.பேரீத்தம் பழங்கள் விநியோகிக்கப்பட்டனமீதி

2440K.g. பேரீத்தம் பழங்களில்

1.சில பெட்டிகள் பழுதடைந்ததாக காணப்பட்டது.

2. சில பெட்டிகளில் 20 K.g இற்கு  குறைந்து காணப்பட்டன .

3.சில பெட்டிகள் சுங்கத்தீர்வை யில் பரிசோதிப்பதற்காக எடுக்கப்பட்டன.

இதுவரை இவற்றுக்காக செலவழிக்கப்பட்ட தொகை 15 மில்லியன்கள் ஆகும்

இவற்றை விநியோகிப்பதற்காக சதோச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன அவற்றுக்கான கொடுப்பனவுகள்இன்னும் வழங்கப்படவில்லை.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...