அமெரிக்காவில் 12 மாடிக் கட்டடம் இடிந்து தரைமட்டம் | உயிரிழந்த நிலையில் 35 பேர் மீட்பு

Date:

அமெரிக்காவின் தென் புளோரிடாவில் உள்ள சிறிய கடற்கரை நகரான மியாமியில் 12 மாடிக் கட்டடம் இடிந்து தரைமட்டமானது.

இதில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. ஒருவர் உயிரிழந்த நிலையில் 35 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சாம்பிளேன் டவர்ஸ் என்ற அந்தக் கட்டடம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் மலைபோல் இடிபாடுகளும் மண்ணும் கிடக்கின்றன. இதில் காணாமல் போன 99 பேர் பட்டியலைத் தயாரித்துள்ள அதிகாரிகள் மீட்பு மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு முழுவதும் இந்த மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனிடையே இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் ஒருவனை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர்.

Popular

More like this
Related

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...

பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...