உலகளாவியரீதியான கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 4 மில்லியனை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், உலகளவில் 383,216 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
உலகளாவியரீதியான பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178,195,929 ஆகும்.பிரேசிலில் நேற்று மாத்திரம் 74,327 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் முதல்முறையாக, பிரிட்டனில் தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தாண்டி 11,007 ஆக அதிகரித்துள்ளது.
உலகில் இதுவரை இடம்பெற்றுள்ள மொத்த கொரோனா மரணங்களில் 50 சதவீத மரணங்கள் அமெரிக்கா, பிரேஸில், இந்தியா, ரஷ்யா மற்றும் பிரித்தானியா முதலான 5 நாடுகளில் பதிவாகியுள்ளன.