கொவிட் தொற்றுக்கு உள்ளான மேலும் 09 பேர் வீட்டிலேயே உயிரிழப்பு!

Date:

நாட்டில் நேற்று (05) ஒரு கொவிட் மரணம் மாத்திரமே பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், மே 21 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 04 ஆம் திகதி வரை 39 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,696 ஆக அதிகரித்துள்ளது.

மே 21 – 01 மரணம்

மே 25 – 01 மரணம்

மே 27 – 02 மரணங்கள்

மே 28 – 02 மரணங்கள்

மே 30 – 08 மரணங்கள்

மே 31 – 04 மரணங்கள்

ஜூன் 01 – 07 மரணங்கள்

ஜூன் 02 – 04 மரணங்கள்

ஜூன் 03 – 07 மரணங்கள்

ஜூன் 04 – 03 மரணங்கள்

 

உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்

பால்

பெண்கள் – 17

ஆண்கள் – 23

 

வதிவிடப் பிரதேசம்

ஹசலக, மாவனல்லை, ஏராவூர் 02, குருநாகல், காலி, ஹாலிஎல, படபொலை, திக்ஓயா, தன்கெதர, இமதூவை, அட்டகலம்பன்னை, களனி, யக்கல, கின்னியா, கொழும்பு 10, மக்கொனை, ஹிக்கடுவை, மெனிக்ஹின்னை, பலங்கொடை, மட்டக்களப்பு, பொல்கம்பொலை, தொடங்கொடை, நுவரெலியா, மஸ்கெலியா, பொகவந்தலாவை, கண்டி, கலகெதர, கொழும்பு 09, மத்துகம, பேருவளை, களுத்துறை மற்றும் நுகேகொடை.

 

அவர்களின் வயதெல்லை

வயது 20 இற்கு கீழ் – 00

வயது 20 – 29 – 00

வயது 30 – 39 – 00

வயது 40 – 49 – 00

வயது 50 – 59 – 08

வயது 60 – 69 – 04

வயது 70 – 79 – 20

வயது 80 – 89 – 07

வயது 90 – 99 – 01

வயது 99 இற்கு மேல் – 00

 

உயிரிழந்த இடங்கள்

வீட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 09

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்தவர்கள் – 06

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் – 25

 

உயிரிழந்தமைக்கான காரணங்கள்

கொவிட் தொற்றுடன் கொவிட் 19 நிமோனியா, கட்டுபாடற்ற நீரிழிவு, இதய நோய் நிலைமை, உயர் குருதியழுத்தம், குருதி நஞ்சானமை, முடக்கு வாதம், புற்றுநோய், இதய சுவாச செயலிழப்பு, நாட்பட்ட சிறுநீரக நோய், செரிப்ரோவாஸ்குலர் விபத்து, குருதி நஞ்சானமையினால் அதிர்ச்சி, மூச்சிழுப்பு, பல உறுப்புக்கள் செயலிழந்தமை, போன்ற நிலைமைகள். .

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...