நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 219,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது..
கேகாலை மாவட்டத்தில் மாவனெல்லை தெவனகல கந்த மற்றும் வரக்காபொல அல்கம கந்த என்ற இடங்களில் இன்று (05) இடம்பெற்ற மண் சரிவுகள் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.