தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு பிற்போடல்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நாளைய தினம் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில், நாளை மாலை 4 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவிருந்தது.

புதிய அரசியலமைப்பு விவகாரம் குறித்து இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எமது செய்திச் சேவைக்கு இன்று பிற்பகல் தெரிவித்திருந்தார்.

எவ்வாறிருப்பினும், நாளைய தினம் நடைபெற இருந்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தங்களுக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சந்திப்புக்கான திகதியும், நேரமும் பின்னர் அறிவிக்கப்படுமென்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...