நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் தொடர்பான முழு விபரம்

Date:

நேற்றைய தினத்தில் (31) மாத்திரம் 84,565 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் 72,887 பேருக்கு சீனாவின் சினோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 739,499 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நேற்றைய தினம் 1,521 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.அதனடிப்படையில் இதுவரை 347,310 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது சொட்டு போடப்பட்டுள்ளது.

இதேவேளை, 26,821 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை இதனை குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...