இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 14 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார். இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர்,
பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டால், மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும்.
ஏற்படும் நிலைமைகளுக்கு அமையவே தீர்மானங்கள் எடுக்கப்படும். ஆனாலும் எதிர்காலத்தில் எடுக்கப்படும் தீர்மானம் குறித்து தற்போது சரியாக கூற முடியாது என்றார்.