பயணத் தடை காரணமாக இலங்கைக்கு 45 ஆயிரம் கோடி நட்டம் | அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்

Date:

நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு  அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக, சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிக நிதி நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வேகமெடுத்துள்ளதை அடுத்து, கடந்த மாதம் 21 ஆம் திகதி முதல் அரசாங்கத்தினால் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர், பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நாளாந்தம் ஆயிரத்து 500 கோடி ரூபாவுக்கும் மேலதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஊடாக, நாளாந்தம் 15 லட்சம் கோடி ரூபா கிடைக்கப் பெற்று வந்த நிலையிலேயே, தற்போது இவ்வாறான நிலைக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

இதேவேளை, கொரோனா தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் ஏனைய மருத்துவ உபகரணங்களை கொண்டுவர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டில் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...