பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானம்

Date:

பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளை ரூ. 5 – 10 இனால் அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருட்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, தமக்கு ஏற்படும் உற்பத்திச் செலவை கருத்திற் கொண்டு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பாண் தவிர்ந்த, பேக்கரிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலைகள் ரூ. 5 – 10 இனால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே எரிபொருட்களின் விலை அதிகரிப்புச் சுமையும் தம் மீது திணிக்கப்பட்டுள்ள நிலையில், பேக்கரி உற்பத்திகளின் விற்பனை அதிகரிப்பையும் சுமக்க வேண்டியுள்ளதாக, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...