இலங்கையில் இதுவரை 2,971,751 பேருக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது

Date:

இலங்கையில்  இதுவரை 2,971,751 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில் (04) மாத்திரம் 20,506 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 15,155 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதுவரை 384,047 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை 114,795 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள்

மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீணான அச்சத்தை போக்கும் வகையில், எரிபொருள் விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய...

இன்று ஆண்டின் முதல் சந்திர கிரகணம்!

வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது,...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான  வானிலை நிலவக்கூடும்.என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய...

நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல்...