தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 563பேர் கைது!

Date:

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 563 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதிக காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய, இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 46,823 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், நேற்று (02) மாத்தளை மாவட்டத்தில் 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 49 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 47 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாட்டை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதற்கு முயற்சித்த 564 பேரும் திருப்பி அனுப்பப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...