மேலும் 07 ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம்!

Date:

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் 07 மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 33 (ஈ) பிரிவின் கீழ், சட்டத்தரணி தொழில்வாண்மையில் விசேட தர நிலைக்கு உயர்ந்துள்ள, தொழில் நடவடிக்கைகளில் நேர்மையாகவும் சிறப்பு வாய்ந்தவர்களுமான சட்டத்தரணிகளை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிப்பதற்கு, ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்களான மிலிந்த குணதிலக்க, ஹரிப்பிரியா ஜயசுந்தர, விக்கும் ஆப்ரூ, சானக்க விஜேசிங்க, ரவிந்திர பத்திரனகே, நெரின் புள்ளே மற்றும் சேத்திய குணசேகர ஆகியோர், ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய ஜனாதிபதி சட்டத்தரணிகள் விரைவில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள உள்ளதுடன், இந்த நியமனங்கள் உயர் நீதிமன்றத்தின் பதிவாளருக்கு இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

2025ம் ஆண்டில் அரபு சர்வாதிகாரிகள் இஸ்ரேலிடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளனர்

-லத்தீப் பாரூக் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட அதி நவீன...

ஊழியரை தாக்கிய பிரபல கொத்து கடை உரிமையாளர் கைது

இலங்கையின் முன்னணி கொத்து உணவு விற்பனையில் ஈடுபடும் சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர் தமது...

அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை வழங்க ஒருவார காலவகாசம்

2023 ஆண்டின் இலக்கம் 9 என்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய அரச...

மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வியின் மறைவுக்கு ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி இரங்கல்!

இந்தியாவைச் சேர்ந்த  புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலானா சையத் சல்மான்...