இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த (61) காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சுகயீனம் காரணமாக தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று காலமானார்.
கமல் ரத்வத்த, கடந்த 2019 டிசம்பரில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவராக பதவியேற்றார்.
இதற்கு முன்னதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் உப தலைவராகவும், காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு பணிப்பாளராகவும் பதவி வகித்த இவர், இரத்தினபுரி சுமன சமன் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேயாகவும் செயற்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சகோதரரான க்ளிபர்ட் ரத்வத்தவின் புதல்வரான கமல் ரத்வத்த பிரபல தொழிலதிபருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.