ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்கள் என்பவற்றை நடத்துவதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய கொவிட் பரவல் நிலைமையின் காரணமாக, பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் நடவடிக்கையாக மேற்படி விடயங்களுக்காக மறு அறிவித்தல் வரை அனுமதியை வழங்க வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், காவல்துறை மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
எனவே, இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.