சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து அஞ்சலோ மெத்தியூஸ் ஆலோசித்து வருவதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடி வருவதாகவும் எதிர்வரும் வாரங்களில் தனது முடிவை தெரிவிப்பதாகவும் அஞ்சலோ மெத்தியூஸ் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு தெரிவித்துள்ளார்.
அணித் தேர்வுக்குழு இளம் அணியை தெரிவு செய்ததன் பிற்பாடு அஞ்சலோ மெத்தியூஸ் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்காக தெளிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.