செவிலியர் சங்கத்தின் 05 கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி உடனடித் தீர்வு

Date:

அரச சேவைக்கான ஐக்கிய செவிலியர் சங்கத்தின் 7 கோரிக்கைகளில் 05 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஏனைய இரு கோரிக்கைகளையும் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் போது நிறைவேற்றவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அரச சேவைக்கான ஐக்கிய செவிலியர் சங்கத்துடன் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது ஜனாதிபதியால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி,

01. செவிலியர் பல்கலைக்கழகத்தை நிறுவுதல்.

02. நல்லாட்சியின் காலத்தில் 07.12.2017 மற்றும் 32/2017 ஊடாக நிறுத்தப்பட்ட ஊழியர்களின் நிலையை மீண்டும் பெற்றுக் கொடுத்தல்.

03. இடைநிறுத்தப்பட்டுள்ள தரம் III இல் இருந்து தரம் II க்கான பதவி உயர்வை ஐந்து வருடங்களுக்கும், தரம் II இல் இருந்து தரம் I க்கு ஏழு ஆண்டுகள் பதவி உயர்வு வழங்கல்.

04. 20 ஆயிரம் ரூபாய் வருடாந்த சீருடை கொடுப்பனவை பெற்றுக் கொடுத்தல்.

05. தற்போது 36 மணித்தியாலங்களாக காணப்படும் வேலை நேரத்தை வாரத்திற்கு 05 நாட்களாக
( 30 மணித்தியாலங்கள்) கருதி, விசேட குழுவிற்கு ஆய்வுக்கு அனுப்புதல்.

குறித்த 5 விடயங்களை உடனடியாக நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...