இன்று (9) காலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்துமேலும் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்சினன் கிராம சேவகர் பிரிவின் மத்திய பகுதி இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகராஜ வளவ்வே பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது