சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகிவற்றை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உள்நாட்டு சந்தையில் பருப்பு மற்றும் சீனி என்பன அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றமை அவதானிப்பட்டுள்ள நிலையில், அதற்கு தீர்வாக அவற்றை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து சீனி மற்றும் பருப்பை நேரடியாக இறக்குமதி செய்து அவற்றை செதொச மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் ஊடாக விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.