இன்று காலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த கடுகஸ்தொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாகரதெனிய வத்த பிரதேசம் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.