மேல் மாகாணத்தில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Date:

மேல் மாகாணத்தில் இன்று முதல் புகையிரத சேவைகளின் எண்ணிக்கை 103 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதையடுத்து புகையிரத பயணிகளின் எண்ணிக்கை நாளந்தம் அதிகரித்ததினால், புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

இதற்கமைவாக இன்று அதிகாலை 50 புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளன. பிற்பகலில் மேலும் 53 புகையிரத சேவைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

புதிய புகையிரத சேவைகால அட்டவனையின்படி பிரதான புகையிரத அம்பேபுஸ்ஸ மீரிகம வெயாங்கொட, கம்பஹா, மற்றும் ராகம ஆகிய பாதைகளின் ஊடாக 33 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன.

கரையோர புகையிரத சேவைகளான அளுத்கம, களுத்துறை, மொரட்டுவ, பாணந்துறை மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய பிரதேசங்கள் ஊடாக 42 சேவைகளும் களனிவெளி புகையிரத பாதை ஊடாக அவிசாவளை, கொஸ்கம மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களை ஊடறுத்து 13 புகையிர சேவைகளும் இடம்பெறவுள்ளன.

அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் வருவோரின் வசதிகருதி மாகாணங்களுக்கூடாக வரையறுக்கப்பட்ட பஸ்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...