LTTE அமைப்பினை மீள உருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது

Date:

கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட  ஒருவரை விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிஐடியினர் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்தார்.
பாக்கியதுரை நகுலேசன் என்பவரே சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் 2019 ம் ஆண்டு கட்டாருக்கு சென்றவர் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நபர் விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் ஊடாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கட்டாரினால் நாடு கடத்தப்பட்டார், திருகோணமலையில் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்த பின்னர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்து அவமதித்த இஸ்ரேல் வீரர்:

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை...

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின்...

வாடகை மற்றும் குத்தகை வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி...