ஓய்வூதிய திட்டத்துக்குள் உள்வாங்கப்படாத ஊழியர்களுக்காக சமூக பாதுகாப்பு நிதியம்!

Date:

நாட்டில் ஓய்வூதிய கொடுப்பனவு கிடைக்கப்பெறாத பகுதிநிலை அரச ஊழியர்கள், தனியார் மற்றும் முறைசாரா துறையின் ஊழியர்களுக்கான சமூக பாதுகாப்பு நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பூர்வாங்க ஆவணத்தை தயாரிப்பதற்கு, பணிப்பாளர் சம்மேளனம், தொழிற்சங்கம் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 

தொழில் அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற தேசிய தொழில் ஆலோசனை சபை கூட்டத்தில், இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வயோதிபப் பருவத்தில் பொருளாதார பாதுகாப்பு இல்லாத பிரஜைகளுக்கு நன்மை பயக்கும் வகையில், சமூக பாதுகாப்பு நிதியம் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...